தருமை ஆதீன 27ஆவது குருமகா சந்நிதானத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு

நம் கல்வி டுடே மாத இதழ் 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில், மறைந்த இயக்குனர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்களின் திருக்கரங்களால் முதல் இதழ் வெளியிடப்பட்டு, சென்னை பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் மறைந்த டாக்டர் பாலரமணி அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது. இன்று, இந்த இதழ் தனது 20ஆம் ஆண்டு பயணத்தை இனிதே தொடங்க உள்ளது. எங்கள் இதழிற்கு, இன்றளவும் நினைவில் வாழும் பல முன்னோடி ஆளுமைகள் தங்களின் அரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், 1948ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன், ஐ.பி.எஸ். அதிகாரி திரு சி.வி. நரசிம்மன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ். மோகன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம். அனந்த கிருஷ்ணன், பத்திரிகை வழிகாட்டி டாக்டர் எஸ். எஸ். வாசன், டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி, டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விட்டல் மற்றும் ஆளுடைய பிள்ளை ஆகியோர் ஆரம்ப காலத்திலேயே எங்களை கரம் பிடித்து வழிநடத்தியதை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் வழிகாட்டுதலின் பலனாகவே, நம் கல்வி டுடே இருமொழி மாத இதழ் தனது 19 ஆண்டுகால இனிய பயணத்தை நிறைவு செய்து, 20ஆம் ஆண்டில் தடம் பதிக்கிறது. இந்த சிறப்பான தருணத்தில், தருமை ஆதீன 27ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் எங்களுக்கு நல்லாசி வழங்கி, ஆசீர்வதித்து, தருமை ஆதீன மணிவிழா சிறப்பு மலரை வழங்கி, எங்கள் இதழையும் பெற்றுக்கொண்டு வாழ்த்துகளை வழங்கினார். உடன், ஸ்ரீ மகா கணபதி உபாசகர், ஸ்ரீ தேவி உபாசகர், ஸ்ரீ பகவத் பிரேமி, ஜோதிட ரத்னா சிவஸ்ரீ ஈஸ்வரக் கண்ணன் ஐயர் அவர்கள்.

You Missed

அறிவு, ஞானம், தொலைநோக்குப் பார்வை போன்ற பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Prime Minister interacts with Alstom CEO Mr. Martin Sion, highlights opportunities for global collaboration with India’s youth
நீட் யுஜி மறுதேர்வுக்கான தயார்நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்கான உயர்நிலைக் குழுக்கூட்டம் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றது
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
Ministry of Women and Child Development Invites Applications for August- September term under Internship Programme of the Ministry
நியூசிலாந்திற்கு முதன்முறையாக சிறுதானிய உணவுப் பொருட்கள் கடல் வழியாக ஏற்றுமதி செய்து சாதனை